×

இலவச வீட்டுமனை கோரி கலெக்டரிடம் ஊராட்சி தலைவர் மனு

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கரிடம் கண்ணப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிகேசவன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இலவச வீட்டு மனை வழங்கக் கோரி ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதன் விவரம் வருமாறு, பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்டது கண்ணப்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் 40 ஆண்டுகாலமாக வீடு, வீட்டுமனை இல்லாமல் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய அனைத்து ஆவணங்களும் உள்ளன. ஆனால் 40 ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு வீட்டுமனை வழங்கக்கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கண்ணப்பாளையம் ஊராட்சியில் தரிசு சர்வே எண் 307ல் ஒரு குடும்பத்திற்கு 2 சென்ட் வீதம் மனை வழங்கினால் வீடு கட்டி வாழ ஏதுவாக இருக்கும். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post இலவச வீட்டுமனை கோரி கலெக்டரிடம் ஊராட்சி தலைவர் மனு appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Tiruvallur ,Kannapalayam Panchayat Council ,Adikesavan ,Collector ,Prabhushankar ,Kannapalayam Panchayat ,Poontamalli Union ,President ,
× RELATED பழவேற்காடு பகுதியில் அடையாளம்...