×

இந்தியாவுடன் உறவு வேண்டுமானால் என்ன செய்ய வேணும் என்று பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளியுறவு அமைச்சர் பேட்டி

புதுடெல்லி: இந்தியாவுடன் உறவு வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு தெரியும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினர். ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘அண்டை நாடு (பாகிஸ்தான்) இந்தியாவுடன் உறவை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமானால் முதலில் எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இதனை இந்தியா பொறுத்துக்கொள்ளாது, நியாயப்படுத்தாது. இந்தியாவுடன் உறவை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்.

கடந்த 2019ம் ஆண்டில் ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு சட்டம் நீக்கப்பட்டு, அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஒன்றிய அரசு உருவாக்கியது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது. நாட்டின் சீர்திருத்த நடவடிக்கையில், முதல் படியாக ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. உங்களது வீட்டின் பிரச்னைகளை சரிசெய்தால், உலகம் எவ்வாறு கேள்வி கேட்க முடியும்? இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் புரிந்து கொண்டுள்ளன’ என்றார்.

The post இந்தியாவுடன் உறவு வேண்டுமானால் என்ன செய்ய வேணும் என்று பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளியுறவு அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,India ,New Delhi ,Foreign Minister ,Jaishankar ,Dinakaran ,
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...