- ராணுவ தளபதி முனீர்
- அமெரிக்கா
- இஸ்லாமாபாத்
- பாக்கிஸ்தான்
- சர்வதேச நாணய நிதியம்
- ஆசியா
- பாகிஸ்தான்
- இராணுவ
- தலைவர் முனீர்
- தின மலர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பல்வேறு காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதை மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவைகளிடம் பாகிஸ்தான் கடனுதவிகளை பெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் அசீம் முனீர் நேற்று வாஷிங்டன் சென்றுள்ளார். இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகப் பிரிவு, “ராணுவ தலைமை தளபதி ஜெனரல் அசீம் முனீர் முதன்முறையாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அமெரிக்க ராணுவம் மற்றும் பிற அரசு துறை அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்” என்று தெரிவித்துள்ளது.
The post பாக். ராணுவ தலைமை தளபதி முனீர் அமெரிக்கா பயணம் appeared first on Dinakaran.