×

தமிழ்நாட்டுக்கு 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு

டெல்லி: தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 16ம் தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறந்துவிட காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்திருந்தது. ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய அவசரக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.

The post தமிழ்நாட்டுக்கு 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Delhi ,Cauvery Management Authority ,Karnataka ,Dinakaran ,
× RELATED சட்ட நுணுக்கங்களை ஆராயாமல் ‘ஏஐ’...