×

ராமர் கோவில் திறப்பு தமிழகத்திற்கு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும்: பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கோரிக்கை

சென்னை: தமிழகத்திற்கும் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசுக்கு, பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 22ம் தேதியன்று மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு அரைநாள் விடுமுறை அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது இந்த அறிவிப்பினை பின்பற்றி, வரும் 22ம் தேதி பல்வேறு மாநில அரசுகளும் பொது விடுமுறை அறிவித்துள்ளன.

இந்த நிலையில் தமிழகத்திற்கும் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசுக்கு, பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் , ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு, தமிழகத்திலும் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும். இந்த நூற்றாண்டின் மகத்தான நிகழ்வை, தமிழக மக்கள் கண்டு களித்து, இறைவன் ராமர் அருள் பெற, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

The post ராமர் கோவில் திறப்பு தமிழகத்திற்கு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும்: பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Ram temple ,BJP ,vice president ,Narayanan Tirupathi ,Chennai ,Kumbabhishek ceremony ,Ayodhya, Uttar Pradesh ,Ram Temple Kumbabhishekam ,
× RELATED ராமர் கோவில் உள்ள அயோத்தியில்...