×

பம்ப் செட்டில் குளித்தபோது மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் சாவு

திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே தடுத்தாட்கொண்டூர் கிராமத்தை சேர்ந்த வினோத் மகன் சப்தகிரி (11). 6ம் வகுப்பு படித்து வந்தான். இதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் லோகேஷ் (8). 3ம் வகுப்பு படித்து வந்தான். உறவினர்களான இருவரும், நேற்று மதியம் அங்குள்ள வயல்வெளியில் உள்ள மோட்டார் பம்ப்செட்டில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது மேலே ஒரு கம்பத்திலிருந்து மற்றொரு கம்பத்திற்கு செல்லும் மின் கம்பி அறுந்து இவர்கள் மேல் விழுந்து தண்ணீரில் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

The post பம்ப் செட்டில் குளித்தபோது மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் சாவு appeared first on Dinakaran.

Tags : Thiruvenneynallur ,Vinod ,Sapthagiri ,Thaduthatkondur village ,Villupuram district ,Kalyaperumal ,Lokesh ,
× RELATED மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் பலி