×

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் ‘பைக்’ பரிசு: போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை: போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் இணையதளம், https://www.tnstc.in மற்றும் செயலி மூலம் கிடைக்கிறது. பயணிகள் 60 நாட்கள் முன்னரே முன்பதிவு செய்து கொள்ளலாம். வார இறுதி நாட்கள், திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நாட்கள் தவிர்த்து இதர நாட்களில் பயணிக்க முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மாதாந்திர குலுக்கல் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

மாதாந்திர குலுக்கல் முறை, இந்த மாதம் முதல், வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் அனைத்து பயணச்சீட்டுகளும் மாதாந்திர குலுக்கல் முறைக்கு தகுதி பெறும். ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும், மற்ற பத்து வெற்றியாளர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும். மேலும் மூன்று உயர் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும்.

இது நவம்பர் 21ம் தேதி முதல் 2025 ஜனவரி 20ம் தேதி வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்யப்படும் அனைத்து முன்பதிவுகளும் இச் சிறப்பு குலுக்கல் முறைக்கு தகுதி பெறும். முதல் பரிசு இரண்டு சக்கர வாகனம், இரண்டாம் பரிசு எல்இடி ஸ்மார்ட் டிவி, மூன்றாவது பரிசு குளிர்சாதன பெட்டி. பொதுமக்கள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் மூலம் பயணம் செய்ய முன்பதிவு செய்து, கடைசி நேர சிரமங்களை தவிர்த்து எளிதாக பயணம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் ‘பைக்’ பரிசு: போக்குவரத்து துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Transport ,CHENNAI ,Department of Transport ,Tamil Nadu Government Transport Corporation ,Transport Department ,Dinakaran ,
× RELATED பைக் டாக்சிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு