×

ஒடிசாவில் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்தது சிபிஐ

ஒடிசா: ஒடிசாவில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். புவனேஸ்வரியில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது அமலாக்கத்துறை துணை இயக்குநர் சிந்தன் ரகுவன்ஷியை கையும் களவுமாக சிபிஐ கைது செய்தது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்ட வழக்கை முடித்து வைக்க தொழிலதிபரிடம் பேரம் பேசியது தெரிய வந்துள்ளது. ரூ.5 கோடி பேரம் பேசிய நிலையில் ரூ.2 கோடி தருவதாக தொழிலதிபர் ஒத்துக் கொண்டுள்ளார். முதல் தவணையாக ரூ.20 லட்சம் வாங்கியபோது சிபிஐ அதிகாரியிடம், அமலாக்கத்துறை அதிகாரி சிக்கியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஒடிசாவில் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்தது சிபிஐ appeared first on Dinakaran.

Tags : CBI ,Enforcement Directorate ,Odisha ,Enforcement ,Deputy Director ,Chindan Raghuvanshi ,Bhubaneswar ,
× RELATED மசோதாவின் பெயரை படிப்பதே எனக்கு விரக்தியை உண்டாக்குகிறது: கனிமொழி எம்.பி!