×

ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு அறுவை சிகிச்சை

புவனேஷ்வர்: பிஜூ ஜனதா தள கட்சி தலைவரும், ஒடிசா முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் கடந்த சில தினங்களாக கழுத்து வலியால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து கடந்த 20ம் தேதி மும்பை சென்ற நவீன் பட்நாயக், அங்குள்ள கோகிலா பென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதன்படி, நவீன் பட்நாயக்குக்கு நேற்று முதுகெலும்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

The post ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு அறுவை சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Odisha ,Naveen Budnayak ,Bhubaneswar ,Biju Janata Dal Party ,Naveen Batnayak ,Mumbai ,Kogila Ben Thirubai ,
× RELATED காற்று மாசு அதிகரிப்பை கருத்தில்...