×

ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் 3 நாட்கள் தெப்ப திருவிழா: திருமழிசையில் கோலாகலம்

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் உள்ள அருள்மிகு குளிர்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் நடைபெற்றது. இந்தப் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முன்னதாக கடந்த மார்ச் 25ம் தேதி விநாயகர் உற்சவம் நடைபெற்றது. கடந்த மார்ச் 26ம் தேதி காலை கொடியேற்றமும் மாலை சிறிய மங்களகிரி உற்சவமும் நடைபெற்றது.

27ம் தேதி காலை சூரிய விருத்தமும் மாலை சந்திர விருத்தமும் 28ம் தேதி காலை மங்கள கிரி உற்சவமும் மாலை சிம்மவாகன உற்சவமும், 29ம் தேதி காலை சிவிகை உற்சவமும் மாலை நாக வாகன உற்சவமும், 30ம் தேதி காலை ஸ்ரீஅதிகார நந்தி சேவையும் மாலை ரிஷப வாகன சேவையும் 31ம் தேதி காலை தொட்ட உற்சவமும் மாலை யானை வாகன உற்சவமும் நடைபெற்றது. கடந்த 1ம் தேதி தேரில் சுவாமி எழுந்தருளுதலும் இதன்பிறகு முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டமும் நடைபெற்றது. இதையடுத்து 2ம் தேதி மாலை ஊணாங்கொடி சேவையும் இரவு குதிரை வாகன உற்சவமும் 3ம் தேதி காலை சிவிகை உற்சவமும் மாலை விமான உற்சவமும் நேற்று 4ம் தேதி காலை ஸ்ரீ நடராஜர் தரிசனமும் பகல் தீர்த்தம் கொட்டி உற்சவமும் நடைபெற்றது.

நேற்று மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இரவு ஸ்ரீபஞ்சமூர்த்திகள் உற்சவமும் இரவு ஸ்ரீசண்டேஸ்வரர் உற்சவமும் நடைபெற்றது. கடந்த 5ம் தேதி இரவு முதல் நாள் தெப்ப உற்சவமும் ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை ஸ்ரீஉமா மகேஸ்வரர் தரிசனமும் இரவு 2ம் நாள் தெப்ப உற்சவமும் ஸ்ரீ சந்திரசேகர் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்றிரவு 3ம் நாள் தெப்ப உற்சவமும் ஸ்ரீ சுப்பிரமணியர் எழுந்தருளுதல் மற்றும் ஸ்ரீ பஞ்ச மூர்த்திகள் ஆஸ்தான பிரவேசம் நிகழ்ச்சியும் விடையாற்றி உற்சவமும் நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை திருமழிசை செங்குந்தர் மகா சபை உத்தரவின்படி, அறங்காலர்கள் டி.வி.கருணாகரன் செங்குந்தர், பி.ராஜி செங்குந்தர்,வி.எஸ்.விஜயகீர்த்தி செங்குந்தர், டி.எஸ்.பாலசுப்பிரமணியம் செங்குந்தர், ஜெ.ஆர்.கோபிநாத் செங்குந்தர் மற்றும் செங்குந்தர் விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில் 3 நாட்கள் தெப்ப திருவிழா: திருமழிசையில் கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Othandeswarar Temple ,3 Days of Diphaya Festival ,Thiruvallur ,Arulmigu Cold ,Utundana ,Poonthamalli ,Othandeswarar Temple Bankuni Uttra Festival ,3 Days of Dipta Festival ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்