×

நார்வே கிளாசிக்கல் செஸ்; குகேஷ் அதிர்ச்சி: அர்ஜூன் ஆச்சரியம்

ஸ்டாவஞ்சர்: நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டியில் உலக சாம்பியனான குகேஷ் தோல்வியை தழுவினார். இந்தியாவின் மற்றொரு வீரரான ஆர்ஜூன் எரிகைசி முதல் இடத்தில் உள்ளார். நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரின் முதல் சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷுடன் மோதினார். இதில் கார்ல்சன் வெள்ளை காய்களுடனும், குகேஷ் கருப்பு காய்களுடனும் விளையாடினர்.

4 மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்த ஆட்டத்தில் 55-வது நகர்த்தலின் போது குகேஷ் செய்த தவறு காரணமாக கார்ல்சன் வெற்றி பெற்றார். இதேபோல் 2வது சுற்று ஆட்டத்திலும் குகேஷ், சகநாட்டு வீரரான அர்ஜுன் எரிகைசியிடம் தோல்வி கண்டார். 2 சுற்று ஆட்டங்களின் முடிவில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா மற்றும் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி (தலா 4.5 புள்ளிகள்) முதல் இடத்தில் உள்ளனர். உலக சாம்பியனான குகேஷ் ஆடிய இரு ஆட்டங்களிலும் தோல்வி கண்டு புள்ளிகள் எதுவும் இல்லாமல் கடைசி இடத்தில் உள்ளார்.

The post நார்வே கிளாசிக்கல் செஸ்; குகேஷ் அதிர்ச்சி: அர்ஜூன் ஆச்சரியம் appeared first on Dinakaran.

Tags : Norway Classical Chess ,Kukesh ,Arjun ,Stavanger ,Norway Classical Chess Tournament ,Arjun Erikaisi ,Dinakaran ,
× RELATED 3வது டி20 போட்டியில் இன்று மிரட்டும்...