×

கொரோனா வைரசால் திணறும் இந்தியா: இந்தியாவுக்கு ஆக்சிஜன் வழங்க உதவிக்கரம் நீட்டிய குவைத் அரசு..!

குவைத்: கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு ஆக்சிஜன் வழங்க குவைத் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கு எதிராக போராடும் வகையில் மத்திய அரசின் சார்பில் பல்வேறு அரசு மருத்துமனைக்கு தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுகின்றன.

மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது ஆக்சிஜன் தேவைப்படுகின்றன. ஆனால் இந்தியா முழுவதும் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக நிலவிவருகிறது. இதனால் இந்திய முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிராக போராடிவருகிறது. இந்த நிலையில் பல நாடுகள் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளது.  

அந்தவகையில் இந்தியாவுக்கு ஆக்சிஜன் வழங்க குவைத் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவுக்கு ஆக்சிஜன் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக குவைத் அரசாங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : India ,Kuwait , India suffocated by corona virus: Kuwait extends aid to supply oxygen to India
× RELATED சொல்லிட்டாங்க…