- நிதி ஆயோக்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- எம்எல்ஏ கே.
- ஸ்டாலின்
- தில்லி
- சட்டமன்ற உறுப்பினர்
- கே. ஸ்டாலின்
- நீதி அயோக்
- சென்னை
- நிதி
- Aayog
- எல். ஏ கே. ஸ்டாலின்
- தின மலர்
டெல்லி: டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளதாவது. “நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்குமாறு வலியுறுத்தினேன். தமிழ்நாட்டுக்கு என்னென்ன தேவை என்பதை நிதி ஆயோக் கூட்டத்தில் பேசினேன். சென்னை 2ம் கட்ட கட்ட மெட்ரோ திட்டம், கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு நிதியை விடுவிக்க வலியுறுத்தினேன். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தினேன். நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தினேன். இலங்கை சிறைபிடித்துள்ள தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை மீட்க வலியுறுத்தினேன். கோரிக்கைகளை கேட்டு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
The post நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்குமாறு வலியுறுத்தினேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.
