×

வாடிப்பட்டி, சமயநல்லூரில் உதயநிதி பிறந்தநாள் விழா நலத்திட்டம்

வாடிப்பட்டி, டிச. 3: திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சமயநல்லூர், வாடிப்பட்டியில் நடந்த விழாவிற்கு வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ தலைமை வகித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.வாடிப்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜா, முன்னாள் பேரூர் செயலாளர் பால்பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் சேகர், பேரூர் செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் பால. ராஜேந்திரன், பசும்பொன்மாறன், வழக்கறிஞர் அணி கலாநிதி, பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேனி, மேற்கு ஒன்றிய சேர்மன் வீரராகவன் முன்னிலை வகித்தனர். அட்டமா அமைப்பின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. சமயநல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் தனசேகர், சிறைச்செல்வன், கிளை செயலாளர் வீரக்குமார் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில் நிர்வாகிகள் செந்தில்குமரன், ஜெயராமன், செல்வி ஆரோக்கிய மேரி, முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Vadippatti ,Samayanallur ,
× RELATED சமயநல்லூர் அருகே வாலிபர் வெட்டி கொலை