×

காரைப்பாக்கம் கிராமத்தில்

அரியலூர், டிச. 2: திருமானூர் வட்டார வேளாண்மைத்துறை மூலம் திருத்தப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம், காரைப்பாக்கம் கிராமத்தில் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் லதா தலைமை வகித்து பேசுகையில், விவசாயிகள் வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடு, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் போன்ற காரணங்களால் ஏற்படும் மகசூல் இழப்புக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யும் பட்சத்தில் நிவாரணத்தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

நடப்பாண்டில் சம்பா நெற்பயிர் ஏக்கருக்கு ரூ.512 செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்றார். துணை வேளாண் அலுவலர் பால் ஜான்சன் பேசுகையில், பயிர் காப்பீடு செய்ய வரும் 15ம் தேதி கடைசி நாளாகும். விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையம் அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் தங்களது ஆதார் அட்டை நகல், அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகலை கொடுத்து பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்றார். முகாமில் காரைப்பாக்கம் கிராம விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர் கலந்து கொண்டனர்.

Tags : village ,Karaipakkam ,
× RELATED பைக், டிராக்டர் நேருக்கு நேர் மோதி...