×

ஆனைமலையாறு நல்லாறு திட்டம் நிறைவேற்ற கோரி காங்கயம்,பொங்கலூரில் பெயர் பலகை திறப்பு

காங்கயம், நவ 30: ஆனைமலையாறு நல்லாறு திட்டம் நிறைவேற்ற கோரி காங்கயம் பகுதியில்  16 இடங்களில் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. காங்கயம் அருகே வடசின்னாரிபாளையம் கிராமத்தில் 16 இடங்களில் “காய்ந்திடும் ஊரை நினை, கட்டிடு உடனே அணை” என்ற நோக்கத்தோடு ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வலியுறுத்தி கிராமப்புறங்களில் 6ம் கட்ட பெயர்பலகை திறப்புவிழா நேற்று நடைபெற்றது.
 அதன்படி சம்மந்த பாளையம் பிரிவு, காரப்பாளையம், காங்கேயம்பாளையம், ஓலப்பாளையம், காட்டுப்பாளையம், குங்காருபாளையம், மேட்டுப்பாளையம்  உட்பட்ட பகுதியில் பெயர்ப்பலகை நேற்று திறக்கப்பட்டது.

 இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: பரம்பிக்குளம் ஆழியாறு நீர் பாசனத்தில் 135 நாட்களுக்கு இடைவிடாது தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது வெறும் 14 நாட்கள் மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 1959 நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தின் படி கேரளா அரசாங்கமும் தமிழக அரசாங்கமும் செய்து கொண்ட உடன்படுக்கையின் படி 9 அணைகள் போக இன்னமும் 3 அணைகளும் மேலும் நீர்மின் நிலையமும் அமைக்கவேண்டும். இதில் கேரளா கட்ட வேண்டிய இடைமலையாறு அணையை 1987ம் ஆண்டே கட்டிமுடித்து விட்டனர். பாசன பகுதியை விரிவாக்கம் செய்த நம் அரசு ஒப்பந்தப்படி ஆனைமலையாறு நல்லாறு அணை திட்டத்திற்கு நீரை கொண்டுவர பிரதான கால்வாய் சுரங்க வழிப்பாதையை அமைக்காததே இதற்க்கு காரணம் என்கின்றனர்.

எனவே இப்பகுதியில் தென்னைகளை காக்கவும் விவசாயம் செழிக்கவும் மக்களின் குடிநீர் ஆதாரத்தை உறுதிப்படுத்தவும் ஆனைமலையாறு நல்லாறு திட்டம் உடனடியாக செயல்படுத்துவேண்டும்  இல்லையெனில்  மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர். பொங்கலூர்: இதே போல் ஆனைமலையாறு நல்லாறு தண்ணீருக்கான இயக்கத்தின் சார்பில் பொங்கலூர் ஒன்றியத்தில் வட சின்னாரிபாளையத்தில் 16 கிராமங்களில் விழிப்புணர்வு மற்றும் பெயர்ப்பலகை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இறுதியாக சடையபாளைம் கிராமத்தில் பாசன சபை தலைவர் ஈஸ்வரமூர்த்தி பேசினார். இதில் ஒருங்கிணைப்பாளர்கள்  வெற்றி, ஈஸ்வரமூர்த்தி, சண்முகசுந்தரம், சண்முகம், அமராவதி பட்டகாரர், நல்லமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Name board ,Bangalore ,Cory Kangayam ,
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு