×

ஆய்வுப் பணிக்காக 25ம் தேதி தமிழக முதல்வர் பெரம்பலூர் வருகை கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி தீவிரம்

பெரம்பலூர், நவ.23:ஆய்வுப் பணிகளுக்காக தமிழக முதல்வர் வருகையை முன் னிட்டு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் புதூய்மைப் பணிகள் நடைபெற்று வருவதை நகராட்சி ஆணையர் குமரிமன்னன் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வினை மேற் கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 25ம் தேதி பெரம்பலூர் வருகை தர இருக்கிறார். பெரம்ப லூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வு பணிகளையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் முழுமையும் தூய்மைப்படு த்தப்படும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்காக பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரிமன்னன் உத்தரவின்பேரில் நகரா ட்சியை சேர்ந்த 50க்கும் மே ற்பட்ட துப்புரவுப்பணியாள ர்கள் பாலக்கரைதொடங்கி, கலெக்டர்அலுவலகம்வரை சாலையின் இருபுறமும் புத ர்களைஅகற்றி,சென்டர் மீடி யனில் செடிகளை அகற்றி சாலைகளில்உள்ள குப்பை களை அள்ளி தூய்மைப்ப டுத்தும் பணிகளை மேற் கொண்டுள்ளனர். தொடர்ந்து 3 நாட்களாக நட ந்து வரும் இப்பணிகளை நகராட்சி ஆணையர் குமரி மன்னன் உத்தரவின்படி, சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், பன்னீர்செல்வம், துப்புரவு மேற்பார்வை யாளர்கள் மோகன், சடை யன், கோபி, விநாயகம், ரா ஜ்குமார் ஆகியோர் மேற் கொண்டு வருகின்றனர். இதனால் கலெக்டர் அலுவ லக சாலை முதல்வர் வரு கைக்காக முழுவீச்சில் தயா ராகி வருகிறது.

Tags : Chief Minister ,Perambalur ,Tamil Nadu ,
× RELATED தலைசிறந்த பொறுப்புகளில் மிளிர...