பழுதடைந்த சாலையால் அவதி

ஊட்டி, நவ. 23: ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. சுற்றுலா நகரமாக ஊட்டியில் தூய்மை பணிகள், வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட அனைத்தும் நகராட்சி மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. நகராட்சி கட்டுப்பாட்டில் வார்டு பகுதிகளில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. இதுதவிர பாதாள சாக்கடைகள், கழிவுகள் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளன. இந்நிலையில் மிஷினரி ஹில், ஒல்டு ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆர்.டி.ஒ. அலுவலகம் அருகே இருந்து மிஷினரி ஹில் செல்ல நகராட்சி சாலை உள்ளது.

இச்சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். சாலையை சீரமைத்து தர வேண்டும் என பல முறை வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சாலையை சீர் செய்ய நகராட்சி முன்வர ேவண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>