விளந்தை சுப்ரமணியர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

ஜெயங்கொண்டம். நவ.22: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் விளந்தையில் அழகு சுப்ரமணியர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த வருட சூரசம்ஹார திருவிழா கடந்த 15ம் தேதி; கொடியேற்றப்பட்டு; காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலை வள்ளி தெய்வானை சமேத அழகு சுப்பிரமணியருக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று. வந்தது. இரவு ரிஷபம், மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து நேற்று முருகப்பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை முக்கிய நிகழ்வான சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சிக்கு வீரபாகு, காளி, தேவர்கள், எமதர்மன் இந்திரன், இந்திராணி, நாரதர் போன்று பக்தர்கள்; வேடமனிந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு முருகப்பெருமான் நரகாசூரனை வதம் செய்யும் சூர சம்ஹார நிகழ்வு நடைபெற்றது. இதில் விளந்தை, ஆண்டிமடம், கவரப்பாளையம், சூரக்குழி, கொளப்படி, மற்றும் அருகில் உள்ள கிராம பக்தர்கள் கலந்துகொண்டு வணங்கினர்.

இதனை தொடர்ந்து இன்று மாலை மஞ்சள், சந்தனம், களபம், பால், தயிர், இளநீர், பன்னீர், உள்ளிட்ட 16 வகையான திரவியங்களாள் வள்ளி தேவசேனா சமேத அழகுசுப்பிரமணியருக்கு அபிஷேகம் நடைபெற்று. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்று அதனை தொடர்ந்து இரவு முத்துப்பல்லக்கில் சாமி திருவீயுலா நடைபெற உள்ளது. மஞ்சள் நீர் விளையாட்டுடன் திருவிழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடினை விளந்தை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: