ஆவின் தீபாவளி ஸ்வீட் ரூ.15 கோடிக்கு விற்பனை

விருதுநகர், நவ. 22: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் 5 வகையான இனிப்புகள் அடங்கிய பேக் மற்றும் நெய் முறுக்கு ஆகியவற்றை சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தியது. சென்னையில் 50 தற்காலிக சிறப்பு இனிப்பு விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.6 கோடிக்கு 114 மெ.டன் இனிப்புகள் விற்பனையானது. இதன் நிகர லாபம் ரூ.83.50 லட்சம், இதர ஒன்றியங்களில் ரூ.9 கோடிக்கு 186 மெ.டன் ஆவின் இனிப்புகள் விற்பனை செய்யாகி உள்ளது. தீபாவளிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட 5 இனிப்புகளில் மக்களின் வரவேற்பு பெற்ற காஜூ பிஸ்தா ரோல், ஸ்டப்டு மோதி பாக் ஆகிய இரு இனிப்புகள் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என ஆவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>