×

தொடர் மழையால் களைகட்டும் மலை காய்கறி விவசாயம்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெய்த போதிலும், வட கிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை.இதனால், தேயிலை விவசாயம் மற்றும் மலை காய்கறி விவசாயம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கவில்லை. மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயம் மேற்க்கொள்ள முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இம்முறையும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்க வேண்டிய ெதன்மேற்கு பருவமழை சற்று தாமதமாக துவங்கியது. ஆனால், ஜூன் மாதம் மூன்றாவது வதரத்திற்கு மேல் தென்மேற்கு பருவமழை துவங்கியது. கன மழை பெய்ய வில்லை என்றாலும் சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நீலகிரியில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாள் தோறும் சாரல் மழை பெய்து வருகிறது. ெதாடர் மழையால், அனைத்து பகுதிகளிலும் உள்ள தேயிலை தோட்டங்கள் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. அதேபோல், அனைத்து பகுதிகளிலும் மலை காய்கறி விவசாயமும் களைகட்டியுள்ளது.  கடந்த இரண்டு ஆண்டுகளாக மலைப்பாங்கான பகுதிகளில் விவசாய பணி மேற்கொள்ளப்படாமல் இருந்த நிலையில், தற்போது விவசாயிகள் அனைத்து பகுதிகளிலும் விதைப்பு பணிகளை துவக்கியுள்ளனர். குறிப்பாக, கேத்தி பாலாடா, முத்தோரை பாலாடா, நஞ்சநாடு, அணிக்கொரை, எப்பநாடு, தும்மனட்டி, இடுஹட்டி, தாம்பட்டி, மணியஹட்டி, கெந்தோரை, தேனாடுகம்பை, காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது….

The post தொடர் மழையால் களைகட்டும் மலை காய்கறி விவசாயம் appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறி...