×

செல்ல வழியின்றி மக்கள் தவிப்பு அரசு தொகுப்பு வீடு மேற்கூரை இடிந்து விழுந்தது

மன்னார்குடி, நவ. 20: கோட்டூர் அருகே கனமழை காரணமாக அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் வாலிபர் ஒருவர் படுகாயமடைந்தார். மூன்று பேர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட சேந்தமங்கலம் கிரா மத்தில் வசிக்கும் விவசாய கூலி தொழிலாளர்களுக்காக ஜவகர் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கடந்த 1996ம் ஆண்டு 18 அரசு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது.இந்நிலையில் கோட்டூர் ஒன்றியத்தில் சேந்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாகவும், வீடுகள் கட்டப்பட்டு 25 ஆண்டுகள் கடந்து விட்டதாலும் சேந்தமங்கலத்தில் உள்ள அரசு தொகுப்பு வீடுகள் வலுவிழந்து காணப்பட்டது. சேந்தமங்கலம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி ராமன் (45). இவரது மனைவி லலிதா (39). இவர்களது மகன்கள் ராகுல் (24), ராபின்சன் (22) ஆகிய 4 பேர்களும் அரசு தொகுப்பு வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவர்களுடைய தொகுப்பு வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் ராகுல் ப்டுகாயமடைந்தார். உடனே அவரை மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற மூன்று நபர்களும் வீட்டின் வாசலில் அமர்ந்து பேசி கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து கோட்டூர் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், ஆணையர் சாந்தி, பிடிஓ முத்துக்குமரன், மாவட்ட கவுன்சிலர் மஞ்சுளா, ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினர். மேலும் அரசு சார்பில் நிவாரணம் கிடைக்க தேவையான நடவடி க்கைகளை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Tags : house ,Government Compound ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்