×

மழை காலத்தை பயன்படுத்தி பறவை, விலங்குகளை பாதுகாக்க வனப்பகுதியில் தண்ணீர் தடாகம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தொண்டி, நவ.13:  தொண்டி, நம்புதாளை, எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட வனப்பகுதியில் தண்ணீர் இல்லாமல் விலங்குகள் மற்றும் பறவைகள் ஊருக்குள் வரும் போது விபத்து ஏற்பட்டு பலியாகிறது. இதைத்தடுக்க வனப்பகுதியில் தண்ணீர் தடாகம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை தாலுகாவிற்கு  உட்பட்ட எஸ்.பி.பட்டிணம், மங்கலக்குடி, தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட வனப்பகுதியில் மான், மயில் உள்ளிட்ட பறவைகள் அதிகளவில் வசித்து வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக போதிய மழை இல்லாததால் கண்மாய் மற்றும் குளங்கள் அனைத்தும் வறண்டு காணப்பட்டது. இதனால் காட்டில் வசிக்கும் பறவை மற்றும் விலங்குகள் தண்ணீருக்காக ஊருக்குள் வருகிறது. அவ்வாறு வரும் போது  வாகனம் மோதி இறக்கிறது. சமூக விரோதிகளாலும் வேட்டையாடப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து பகுதியிலும் நல்ல மழை பெய்துள்ளது.

பெரும்பாலான கண்மாய் மற்றும் குளங்கள் நிறைந்து வருகிறது. இனி வரும் காலமும் மழை காலம் என்பதால் இதை பயன்படுத்தி வனப்பகுதி, கண்மாய்களில் நீர் தடாகம் அமைத்து தண்ணீர் கிடக்க வழி வகை செய்தால் மயில், மான்கள் ஊருக்குள் வருவதை தடுத்து விடாலம். என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஆர்வலர் பரக்கத் அலி கூறியது, வனப்பகுதியிலிருந்து வெளியேறும் விலங்குகள் மற்றும் பறவைகள் பெரும்பாலும் தண்ணீருக்காவே வெளியேறுகிறது. அவ்வாறு வருவதை சமூக விரோதிகளால் வேட்டையாடப்படுவது, நாய் கடித்து இறப்பதும் வாடிக்கையாகி விட்டது. மயில்கள் அவ்வப்போது மின் கம்பியில் சிக்கி பலியாகி வருகிறது. இதை தடுக்க அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தேசிய பறவையான மயில்களின் எண்ணிக்கை இப்பகுதியில் அதிகரித்து வருகிறது. இதை பாதுகாக்க வேண்டும் என்றார்.

Tags : Community activists ,forest ,water pond ,season ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...