×

வெண்டைக்காய் விளைச்சல் ஜாஸ்தி: விலையோ கம்மி-விவசாயிகள் கவலை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாடியூர், மோளபாடியூர், ஊராளிபட்டி மற்றும் குளத்தூர் காளணம்பட்டி சுற்று வட்டாரப்பகுதிகளில் விவசாயிகள் வெண்டைக்காய்கள் சாகுபடி செய்து வருகின்றனர். வெண்டைக்காய் பயிரிடுவதற்கு ஏக்கருக்கு 3  கிலோ அளவுக்கு விதைகள் தேவைப்படுகிறது. விதைப்பு செய்த 45 நாட்களில்  அறுவடைக்குத் தயாராகி விடும். அதன்பிறகு தினசரி காய்கள் பறிக்கலாம். ஆனால், வெண்டைக்காய் அறுவடை என்பது சற்று கடினமான பணியாகும். அறுவடையின்போது காய் மற்றும் செடியிலுள்ள முட்கள் பட்டு கை முழுவதும்  புண்ணாகி விடும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கூலி ஆட்களுக்கு பற்றாக்குறை  நிலவி வரும் நிலையில், வெண்டைக்காய் அறுவடை செய்வதற்கு ஆட்கள் வருவதற்கு  தயக்கம் காட்டுகிறார்கள். இந்நிலையில் வெண்டைக்காய்க்கு போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். இதுகுறித்து விவசாயி கதிரேசன் கூறியதாவது: அறுவடை செய்ய வேண்டிய ெவண்டைக் காய்களை உரிய நேரத்தில் அறுவடை செய்யாவிடில் முற்றி வீணாகி விடும். இதனால், கடும் சிரமத்துக்கு மத்தியில் அறுவடை செய்து சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்கிறோம். ஆனால் அங்கு போதிய விலை கிடைப்பதில்லை. ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ. 8 முதல் 12 வரையே விற்பனையாகிறது. முகூர்த்த நாட்களில் ரூ. 15 முதல் 20 வரை விற்பனையாகிறது.  தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அறுவடைப் பணிகள் மேற்கொள்கிறோம்.அதற்கு ஒரு ஆளுக்கு கூலியாக ரூ. 200 கொடுக்கிறோம். ஒரு ஆள் 20 கிலோ முதல் 25 கிலோ வெண்டைக்காய்களையே பறிக்க முடிகிறது. இதனால் நஷ்டத்தையே சந்தித்து வருகிறோம். தற்போது வெண்டைக்காய் வரத்து அதிகமாக உள்ளது. ஆனாலும், போதிய விலை கிடைக்காததற்கு காரணம் தெரியவில்லை, என்றார்….

The post வெண்டைக்காய் விளைச்சல் ஜாஸ்தி: விலையோ கம்மி-விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Amla ,Dindigul ,Padiyur ,Molapadiyur ,Uralipatti ,Kulathur Kalanampatti ,Panchayat ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...