×

திருச்சுழி வீரசோழனில் அதிமுக கிளை செயலாளர்களுக்கு வேஷ்டி, சட்டை விநியோகம்

திருச்சுழி, நவ. 11:  நரிக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளரும், துணை சேர்மனுமான அம்மன்பட்டி ரவிச்சந்திரன் கிழக்கு ஒன்றியங்களில் உள்ள அனைத்து அதிமுக கிளை கழக செயலாளர், பிற அணி செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு தீபாவளியையொட்டி வேஷ்டி, சட்டை மற்றும் ரூ.1000 பரிசு 300 மேற்பட்டோருக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அம்மா சரவணன், முதல்நிலை அரசு ஒப்பந்தகாரர் அம்மன்பட்டி கௌதமராஜா, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வீரபாண்டி, ஒன்றிய துணை செயலாளர் சாந்தி தவமுத்து, ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஜெயசந்திரன், இலக்கிய அணி செயலாளர் வேல்சாமி, இளைஞர்- இளப்பெண் பாசறை செயலாளர் ஞானப்பாண்டியன், ஒன்றிய மாணவரணி செயலாளர் வேல்முருகன், சிறுபான்மை பிரிவு  ஒன்றிய செயலாளர் செயிலாவுதீன், தகவல் தொழில்நுட்ப கருப்பசாமி மற்றும் அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Vashti ,AIADMK ,Tiruchirappalli ,branch secretaries ,
× RELATED அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி...