மன்னார்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பள்ளி துவங்க வேண்டும் அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்

மன்னார்குடி, நவ. 11: மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பள்ளி துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க வட்ட பேரவை கூட்டம் அதன் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் மன்னார்குடியில் நடைபெற்றது. பேரவை கூட்டத்தை மாவட்ட இணைச்செயலாளர் சுதாகர் துவக்கி வைத்தார். இதில் முன்னாள் மாநில துணைத் தலைவர் அகோரம், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகி முருகையன், வட்ட செய லாளர் செந்தில்ராஜன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பள்ளி துவங்கப் பட வேண்டும், கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த வேண்டும், மன்னார்குடி கோட்டத்தில் நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் சேதமடைந்துள்ள அரசு கட்டிடங்களை அகற்றி விட்டு புதிதாக கட்டி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முன்னதாக சங்க நிர்வாகி தமிழ்ச்சுடர் வரவேற்றார். வட்ட பொரு ளாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

Related Stories:

>