×

அரசு விதிமுறைகளின்படி உரம் விற்க வேண்டும் கலெக்டர் எச்சரிக்கை

சிவகங்கை, நவ.9: சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மாவட்டத்தில் இதுவரை 70 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும், தனியார் உரக்கடைகளிலும் யூரியா 4 ஆயிரத்து 60 மெ.டன், டிஏபி 912 மெ.டன், பொட்டாஸ் ஆயிரத்து 62 மெ.டன், காம்ளக்ஸ் 2 ஆயிரத்து 436 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இம்மாதம் 5 ஆயிரம் மெ.டன் யூரியா, டிஏபி 900 மெ.டன், பொட்டாஸ் 600 மெ.டன், காம்ப்ளக்ஸ் 2 ஆயிரத்து 500 மெ.டன் கொள்முதல் செய்து இருப்பு வைத்து விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு உரங்கள் சரியான முறையில் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் வேளாண் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இளையான்குடி வட்டாரத்தில் சரியாக ஆவணங்கள் பராமரிப்பு செய்யாத இரண்டு தனியார் உர விற்பனையாளர்களின் உரம் விற்பனை உரிமத்தை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசு விதிமுறைகளின்படி உரம் விற்பனை செய்ய வேண்டும். தவறு செய்யும் விற்பனையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Collector ,
× RELATED குழந்தை திருமணங்களை தடுக்க ஆய்வு கூட்டம்