×

சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் விரிவாக்க அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி: சீரமைக்க கோரிக்கை

தா.பழூர் நவ.9:அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே சோழமாதேவியில் அமைந்துள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில், அரியலூர் ஒன்றிய வேளாண்மை துறை தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் 2020-21 கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய விரிவாக்க அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.பயிற்சிக்கு தா.பழூர் ஒன்றிய தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொ) நல்லமுத்து வரவேற்றார். வேளாண் இணை இயக்குனர் பழனிச்சாமி பயிற்சிக்கு தலைமை வகித்து பேசினார். மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுகண்ணன் பயிற்சியின் நோக்கம் பற்றி விரிவாக கூறினார்.

மேலும் இப்பயிற்சியில் மைய தொழில்நுட்ப வல்லுநர்கள் ராஜா ஜோஸ்லின், திருமலைவாசன், ஆகியோர் ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் அவற்றின் முக்கியத்துவம், சாகுபடி குறிப்புகள், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு முறைகள், தீவனப்பயிர் சாகுபடி முறைகள் பற்றி விரிவாக கூறினா். இப்பயிற்சியில் 20 வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் மற்றும் கால்நடை துறை சார்ந்த உதவி மருத்துவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முடிவில் கிரீடு வேளாண் அறிவியல் மைய பண்ணை மேலாளர் பிரபு நன்றி கூறினார்.

Tags :
× RELATED தகுதியுடையோர் விண்ணப்பிக்க விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை