×

தடையை மீறி பாஜ வேல் யாத்திரை எதிரொலி: வேலூர் மாவட்ட எல்லையில் போலீசார் குவிப்பு

வேலூர், நவ.9: பாஜ வேல் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக நேற்று காலை முதல் வேலூர் மாவட்ட எல்லையில் ஏஎஸ்பி தலைமையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பாஜ வேல் யாத்திரை அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் தலைமையில் நவம்பர் 6ம் தேதி தொடங்கி டிசம்பர் 6ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் டிஜிபியிடம் புதிய மனு வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் திட்டமிட்டப்படி வேல் யாத்திரை சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் இருந்து நேற்று காலை 10 மணியளவில் தொடங்கிய சிறிது நேரத்தில் பாஜ தலைவர் முருகன் கைது. செய்யப்பட்டார்.

அதேநேரத்தில் பாஜ வேல் யாத்திரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக இன்று வேலூர் வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு வேலூர் மாவட்ட எல்லையான பெருமுகை பிளளையார்குப்பத்தில் ஏஎஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் நேற்று முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வேலூர் மாவட்டத்துக்குள் நுழையும், வெளியேறும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

Tags : Echo ,pilgrimage ,Bajaj Vail ,border ,Vellore district ,
× RELATED வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை!:...