×

நித்திய பூஜைகளை நடத்தக்கோரி நெல்லையில் 108 தேங்காய் உடைத்து: மக்கள் அறவழி போராட்டம்

நெல்லை, நவ.9: நெல்லை டவுன் அக்கசாலை விநாயகர் கோயில் தெருவில் கோளரிநாதர் பீடத்தில் நித்திய பூஜைகளை நடத்தக்கோரி திருவிளக்கு ஏற்றி 108 தேங்காய் உடைத்து அப்பகுதி மக்கள் அறவழி போராட்டம் நடத்தினர்.
நெல்லை டவுன் அக்கசாலை விநாயகர் கோயில் தெருவில் 300 ஆண்டுகள் பழமையான மத்பரசமய கோளரிநாத பீடாதிபதி ஆதிகுருமூர்த்தி சன்னதி உள்ளது. இங்கு கடந்த 2 வருடமாக எவ்வித நித்திய பூஜைகளும் ஆகமவிதிப்படி நடக்கவில்லை. எனவே நித்திய பூஜைகள் செய்திடக்கோரி கடந்த மாதம் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

தொடர்ந்து நேற்று குருமடம் முன்பாக பெண்கள் தீபம் ஏற்றினர். பின்னர் 108 தேங்காய் உடைத்து அனைவரும் அறவழி போராட்டம் நடத்தினர். நிகழ்ச்சிக்கு சமூக சேவகர் மாரிமுத்து தலைமை வகித்தார். ஐயப்பன், முத்து, முருகன், கார்த்திக் மற்றும் திரளான பெண்கள் பங்கேற்றனர். கோயில் முன்பு பெண்கள் திரண்டதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Tags : pujas ,Nellai ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...