×

வர்த்தக நிறுவனங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு

பொள்ளாச்சி, நவ. 6: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது கொரோனா தொற்று குறைந்தாலும் முறையாக விதிமுறையை கடைபிடித்தால், கொரோனாவை  முழுமையாக தடுக்கலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் இவ்வேளையில், வர்த்தக நிறுவனங்களில் கூட்டம் அதிகரிக்க துவங்கியுள்ளது. எனவே, முகவசம் அணியாமலும். அரசின் விதிமுறை முறை மீறுவோருக்கும் அபராத நடவடிக்கையை மீண்டும் துரிதப்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று, நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், போலீசார் உதவியுடன் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

 இதில், கடைவீதி, போலீஸ் ஸ்டேஷன் ரோடு, இமாம்கான் வீதியில் உள்ள துணிக்கடை மற்றும் நகைக்கடை, நடைபாதை கடைகளில் ஆய்வு மேற்கொள்ளும்போது, பலரும் முக கவசம் அணியாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து முக கவசம் அணியாதவர்கள் சுமார் 10க்கும் மேற்பட்டோருக்கு தலா ரூ.200ம், சமூக இடைவெளியில் வாடிக்கையாளர்களை நிறுத்தாமல் அரசின் விதியை பின்பற்றாத சுமார் 7கடை  உரிமையாளர்களுக்கு தலா ரூ.500ரை அபராதம் விதிக்கப்பட்டது.  இந்த நடவடிக்கை வரும் நாட்களிலும் தொடர்ந்திருக்கும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED ரூ.4 லட்சம் கடனை திருப்பி கேட்ட பெண் மீது தாக்குதல்