×

பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கல்லூரியை மாவட்டத்தில் முதன்மை கல்லூரியாக மாற்றுவேன் புதிய முதல்வர் உறுதி

உசிலம்பட்டி, நவ.4: மதுரை மாவட்டத்திலேயே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியை முதன்மை கல்லூரியாக மாற்றுவேன் என்று புதிய முதல்வர் ரவி உறுதிமொழியளித்தார். இக்கல்லூரியில் படித்த மாணவனே கல்லூரி முதல்வரானதும், அவருக்கு கள்ளர் கல்வி கழக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். மதுரை மாவட்டம், செல்லம்பட்டி காந்தி நகரை சேர்ந்த ஒ.ரவி 1982 முதல் 1985 வரை உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் பிஎஸ்சி பயின்றார். அதன் பின்பு சிவகாசியில் எம்எஸ்சி எம்பில் முடித்து 1992ல் உதவி பேராசிரியராக உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் பணியாற்றினார். அடுத்து துறைத்தலைவராகவும், துணை முதல்வராகவும் பதவி வகித்தார்.

பின்னர் 2017 முதல் 2020 வரை மதுரை காமராசர் பல்கலை கழக தேர்வு ஆணையராக இருந்தார். நேற்று முதல் ஒ.ரவி, உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற முதல்வர் ரவியை கல்லூரியின் கள்ளர் கல்விக் கழக செயலாளர் வாலாந்தூர் பாண்டி தலைமை தாங்கி பாராட்டி பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கலியமூர்த்தி, கல்லூரி தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் வனராஜா உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு முதல்வரை வாழ்த்தி பேசினார்கள். இந்த விழாவில் பேசிய கல்லூரி முதல்வர் ரவி, மாவட்டத்திலேயே கல்லூரியை முதன்மை கல்லூரியாக கொண்டு வருவேன் என்று பேசினார்.

Tags : Chief Minister ,Pasubon Muthuramalingadevar College ,district ,
× RELATED தனிக்கட்சி தொடங்குகிறார் ஓ.பன்னீர்செல்வம்?