×

விமான நிலைய ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்

திருச்சி, நவ.4: திருச்சி விமான நிலைய தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு தினமும் மாமுல் பணம் தர மறுத்ததாக கூறி 20 டிராலி தள்ளும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட இவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். அரசாணைப்படி தினக்கூலி ரூ.525 வழங்க வேண்டும். தொழிலாளர்களிடம் 2 வருடங்களாக தினமும் ரூ.600 வசூல் செய்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ மாநகர் மாவட்டக்குழு தலைமையில், டிராலி தள்ளும் தொழிலாளர்கள் திருச்சி விமான நிலையம் முன் குடும்பத்தினரோடு கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்துக்கு சிஐடியூ மாநகர் மாவட்ட துணை தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி பொன்மலை பகுதி செயலாளர் கார்த்திகேயன், போக்குவரத்து சங்க மணிமாறன், லட்சுமணன் ஆகியோர் பேசினர். இதில் டிராலி தள்ளும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதையடுத்து நேற்று மாலை வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் விமானநிலைய அதிகாரிகள் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் 45 நாட்களுக்குள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மாலையில் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags : airport ,company ,
× RELATED சென்னை விமான நிலையம் உள்ளிட்ட 3...