×

அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் அறிவிப்பு தஞ்சையில் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கல்

தஞ்சை, நவ. 4:  கொரோனா தொற்று காரணமாக பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாமல் தொலைக்காட்சி மூலமாக கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை 3 பருவங்களாக பாடப்புத்தகங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே முதல் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 2ம் பருவ பாடப்புத்தகங்கள் தஞ்சைக்கு கொண்டு வரப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தஞ்சை கீழவாசல் சின்னக்கடை தெரு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 7 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 2ம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் பேசுகையில், தஞ்சை மாவட்டத்தில் அரசு நடுநிலை, தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என மொத்தம் 1,675 பள்ளிகளை சேர்ந்த 1,28,100 பேருக்கு 2ம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன. பிளஸ் 1, பிளஸ்2வை சேர்ந்த 8,400 மாணவர்களுக்கு தொகுதி 2 புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன. தொலைக்காட்சி மூலமாக பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது என்றார். விழாவில் தலைமை ஆசிரியை(பொ) குணசீலி, பட்டதாரி ஆசிரியர் ஜோதிலட்சுமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொ) அனுசியாதேவி, ஆசிரியர் பயிற்றுனர் தேவிபாலா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

Tags : Tanjore ,
× RELATED சட்டவிரோத மணல் கொள்ளை புகாரில்...