தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு நாளை திருப்பூர் வருகை

உடுமலை, நவ.4:  ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டத்திற்கு தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு நாளை (5ம் தேதி) திருப்பூர் வருகை தர உள்ளது. இதுகுறித்து திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை சிறப்பாக அமைய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் பயணம் செய்து மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், சமூக சுற்றுச்சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்டங்களில் இடம் பெறக்கூடிய பொது அம்சங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள பொது பிரச்னைகள் குறித்த சாராம்சங்களை எழுத்து பூர்வமாக கொடுக்கப்படும் மனுக்களை பெறுவதற்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தேர்தல் அறிக்கை குழு நாளை காலை 9 மணி முதல் திருமுருகன் பூண்டி யில் அமைந்துள்ள பாப்பீஸ் ஓட்டலில் மனுக்களை பெற்று கொள்கின்றனர். ஆகையால், திருப்பூர் மத்திய, கிழக்கு, வடக்கு, தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட, மாநகர், ஒன்றிய பொறுப்பாளர்கள், மாநில நிர்வாகிகள், பொறுப்பு குழு உறுப்பினர்கள், பகுதி கழக நிர்வாகிகள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், வணிகர்கள், தொழிலதிபர்கள் பொது மக்கள், மாணவ, மாணவியர் தங்கள் கோரிக்கைகளை எழுத்து பூர்வமாக எழுதி மனுக்களாக கொடுக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

Related Stories:

>