×

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் 11ம் ஆண்டு தொடக்க விழா

திருச்சி, நவ.3: கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் 11ம் ஆண்டு தொடக்க விழாவில் தமிழக காங்கிரஸ் சிறுபான்மைத்துறை மாநில துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். திருச்சி வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் கடந்த 1ம் தேதி கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் கொரோனா காலத்தில் சிறப்பாக மக்கள் நல தொண்டாற்றிய சமூக சேவகர்களுக்கு விருதும் பாராட்டும் தெரிவிக்கும் விழா மற்றும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் சிறுபான்மைத்துறை மாநில துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், 11ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்திற்கு வாழ்த்துக்களையும், எம்பி தேர்தலில் திருநாவுக்கரசரை வெற்றி காண செய்த கிறிஸ்தவ மக்களுக்கு நன்றியை தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப்பிரிவு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்திற்கு என்றும் உறுதுணையாக நிற்கும் என்றும் கூறினார். விழாவில் கிறிஸ்தவ நல்ெலண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், திருச்சி மாவட்ட பொறுப்பாளர் புஷ்பராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags : 11th Anniversary Celebration ,Christian Goodwill Movement ,
× RELATED அனைவரது கோரிக்கைகளையும்...