×

சுடுகாட்டு வழியில் தேங்கிய மழைநீர் சடலத்தை எடுத்துசெல்வதில் சிரமம் : உறவினர்கள் போராட்டம்

ஊத்துக்கோட்டை, நவ.1: பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் ஊராட்சி கிருஷ்ணாபுரம் கண்டிகை கிராமத்தை சேர்ந்த நாகைய்யா(97) வயது மூப்பின் காரணமாக நேற்று காலை இறந்தார். அவரது உடலை மாலை 5 மணிக்கு அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். ஆனால் உடல் அடக்கம் செய்யக்கூடிய சுடுகாட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழைநீர் தேங்கி நின்றது. இதனால் காலையிலேயே சம்மந்தப்பட்ட நபர்களிடம் சுடுகாட்டை சீரமைத்து தரவேண்டும் என கூறினர். ஆனால் மாலை வரை ஊராட்சி நிர்வாகத்தினர் அதை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், முதியவரின் உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் எடுத்துக்கொண்டு சுடுகாடு நோக்கி சென்றனர்.

அப்போது சுடுகாட்டில் மழைநீர் தேங்கி நின்றதால் உடலை எடுத்துச்செல்ல முடியவில்லை இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் முதியவரின் உடலை சுடுகாட்டுக்கு வெளியே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை சமரசம் செய்து, பின்னர் ஊராட்சி நிர்வாகத்திடம் கூறி சுடுகாட்டில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தும்படி கூறினார். பின்னர் ஊராட்சி நிர்வாகத்தினர் பொக்லைன் இயந்திரம் மூலம் மழைநீரை வடிய செய்தனர். ஆனால் மழைநீர் செல்ல வழியில்லாததால் மீண்டும் அதே இடத்திற்கு வந்தது. பின்னர் முதியரின் உடலை உறவினர்கள் முட்டியளவு தண்ணீரில் எடுத்துச்சென்று தகனம் செய்தனர். 

Tags : relatives ,crematorium ,
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...