×

செண்பகத்தோப்பு அணை சீரமைப்பு பணிகள் நிறைவு அமைச்சர் ஆய்வு படவேடு அருகே ₹16.37 கோடியில் நடைபெற்று வந்த

கண்ணமங்கலம், நவ.1: படவேடு அருகே செண்பகத்தோப்பு அணையில் ₹16.37 கோடியில் நடைபெற்று வந்த சீரமைப்பு பணிகள் நிறைவானதை தொடர்ந்து, அமைச்சர், கலெக்டர், எம்எல்ஏக்கள் ஆய்வு செய்தனர்.படவேடு அருகே செண்பகத்தோப்பு அணையில் கட்டுமானப் பணிகள் கடந்த 2001ம் ஆண்டில் தொடங்கி 2007ல் முடிவுற்றது. ஆனால், 7 ரேடியல்கள் சரியாக இயங்காமல் பழுதடைந்திருந்தது. இதனால் அணையின் முழு கொள்ளளவான 6,232 அடிக்கு தண்ணீரை சேமிக்க முடியவில்லை. 47 அடி மட்டுமே தண்ணீர் சேமிக்க முடிந்தது. அதாவது, அணையின் மொத்த கொள்ளளவான 287 மில்லியன் கனஅடியில் 150 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே சேமிக்கப்பட்டது. இதனால் பருவமழை பெய்தும் பயனின்றி இருந்தது.

இந்நிலையில், அணையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில், கடந்த ஜனவரி மாதம் ₹16.37 கோடியில் ஷெல்டர்கள் சீரமைக்கும் பணி தொடங்கியது.தற்போது பணி நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, எம்எல்ஏக்கள் தூசி கே.மோகன், வி.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தனர். அப்போது, அதிகாரிகள் ஷெல்டர்களை இயக்கி காண்பித்தனர். பின்னர் அமைச்சர் கூறுகையில், செண்பகத்தோப்பு அணை நிரம்பினால் 48 ஏரிகளுக்கு நீர்வரத்து கிடைக்கும், 7,497 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்'''' என்றார்.

Tags : Shenbagathoppu Dam ,Minister ,inspection padavedu ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...