×

வடமாநில வாலிபர் தற்கொலை

புதுச்சேரி, நவ. 1: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரபுட் ரே மகன் கலாம் ரே (46). நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இதற்காக அங்குள்ள குடியிருப்பில் தங்கி வந்தார். இதனிடையே கலாம் ரேவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார். ஆனால் உடல் நிலை பாதிப்பு சரியாகாமல் தொடர்ந்து மோசமாகி வந்ததால் கலாம் ரே மனவிரக்தி அடைந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தங்கியிருந்த குடியிருப்பில் தூக்குபோட்டுக்கொண்டார். மற்ற ஊழியர்கள் அவரை மீட்டு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சக ஊழியரான சங்கிர் ரே நெட்டப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுவை அருகே பரபரப்பு அண்டா, குண்டா திருடிவிட்டு போதையில் தூங்கிய ஆசாமிகள் வைரலாகும் வீடியோ
காலாப்பட்டு, நவ. 1: புதுவை அருகே அண்டா, குண்டாவை திருடிவிட்டு போதையில் தூங்கிய ஆசாமிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  புதுவை காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதி மாத்தூர் சாலையில் அமைந்துள்ளது. இங்கு பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி, கனகசெட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர்கள் இங்கு வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கு 2 ஆசாமிகள் குடிபோதையில் குப்பை சேகரித்து உள்ளனர். அப்போது சில வீடுகளின் பின்புறம் அண்டா, குண்டா, அடுப்பு,  தட்டு, டம்ளர் உள்ளிட்ட பாத்திரங்கள் கழுவி காய வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பழைய பொருட்கள் போல் சாக்குப்பையில் போட்டுக் கொண்டு வந்தனர்.

 பின்னர், போதை அதிகமாகி காலாப்பட்டு செல்லும் சாலையில் நடக்க முடியாமல், சாலையோரமாக சாக்குப்பையை தலையில் வைத்து படுத்து தூங்கினர். அவ்வழியாக சென்ற சுனாமி குடியிருப்பை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரகாஷ், வித்தியாசமான கோலத்தில் தூங்கிய அந்த ஆசாமிகளை எழுப்பி விசாரித்துள்ளார். ஆனால், அவர்கள் குடிபோதையில் உளறியது அவருக்கு புரியவில்லை. இதையடுத்து, அவர்கள் வைத்திருந்து சாக்குப்பையை பிரித்து பார்த்துள்ளார். அதில் அண்டா, குண்டா, அடுப்பு, தட்டு, டம்பர் உள்ளிட்ட பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர்களிடம் துருவி துருவி விசாரித்தபோது, போதை மயக்கத்தில் குப்பையில் கிடந்தது என்று கூறியுள்ளனர். இதுகுறித்து ஆட்டோ டிரைவர் பிரகாஷ் காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில், காலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியை சேர்ந்தவர் என்றும், குப்பை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்ததும், குடிபோதையில் பொருட்களை எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையே குடிபோதையில் பொருட்களை திருடிவிட்டு அதே பகுதியில் தூங்கிய ஆசாமிகளின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags : Northland ,teen suicide ,
× RELATED சேலத்தில் பரபரப்பு சம்பவம் குட்கா...