×

மருதுபாண்டியர்கள் சிலைக்கு திமுக நிர்வாகிகள் மரியாதை

ராமநாதபுரம், அக்.28:  இந்திய விடுதலை போராட்ட வீரர், மாமன்னர், மருதுபாண்டியர்கள் 219வது நினைவு தினத்தை முன்னிட்டு மண்டபம் மேற்கு ஒன்றியம் வாலாந்தரவையில், மாமன்னர்கள் திருவுருவச்சிலைக்கு மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஜீவானந்தம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பி.டி.ராஜா, வாலாந்தரவை ஊராட்சி மன்றத்தலைவர் பூரணவேல், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணைத் தலைவர் பிரவீன், வெள்ளரிஓடை ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரசேகர், ஒன்றிய குழு உறுப்பினர் சோமசுந்தரம், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் முனிஷ் வினோத், வழுதூர் கிளை செயலாளர் கார்மேகம், பஞ்சு, சரவணன், பூசைத்துரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Tags : DMK ,executives ,Maruthupandiyar ,
× RELATED அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர் ராஜேஸ்குமார் வரவேற்றார்