தேவகோட்டை பகுதிகளில் தி.மு.க உறுப்பினர் சேர்க்கை முகாம்

தேவகோட்டை, அக்.22: தேவகோட்டை நகர தி.மு.க சார்பில் நேற்று முன்தினம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உடனடியாக உறுப்பினர் அட்டையினை நகரச்செயலாளர் பாலமுருகன் வழங்கினார். முன்னாள் கவுன்சிலர் கருணாநிதி, முரசொலி காந்தி, ஆறுமுகம், அப்துல்ஜபார், மற்றும் ராசாத்தி உள்பட ஏராளமான தி.மு.க வினர் பங்கேற்றனர். தேவகோட்டை தெற்கு ஒன்றியம் திருவேகம்பத்தூரில் தெற்கு ஒன்றிய செயலாளர் நாகனி ரவி தலைமையில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் முன்னிலையில் ஆன்லைன் மூலம் தி.மு.க புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. புதிய உறுப்பினர்களுக்கு உடனடியாக உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது. முன்னதாக கலையரங்கம் முன்பாக கட்சிக்கொடி ஏற்றினர்.

Related Stories:

More