நரிக்குடி அருகே இந்திய தேசிய லீக் கட்சி பிரமுகருக்கு கொலைமிரட்டல்

திருச்சுழி, அக். 21:  நரிக்குடி அருகே வீரசோழனை சேர்ந்தவர் பசீர் அகமது. இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவராக உள்ளார். தற்போது சென்னையில் வசித்து வரும் இவர் அவ்வப்போது வீரசோழனுக்கு வந்து செல்வது வழக்கம். அதே ஊரை சேர்ந்த கலிலூர் ரகுமான் சென்னையில் தொழிலதிபராக உள்ளார். கலிலூர் ரகுமானிடம், பசீர் அகமது ரூ.3 கோடி கடன் வாங்கியதாகவும். அதில் சுமார் ரூ.1.50 கோடி வரை திருப்பி கொடுத்து மீதி பணத்தை கொடுத்து தாமதப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பசீர் அகமது வீரசோழனுக்கு வந்துள்ளார். இதையறிந்த கலிலூர் ரகுமான் தனது ஆதரவாளர்களுடன் அவரது வீட்டிற்கு சென்று கொலைமிரட்டல் விடுத்ததுடன், துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பசீர்அகமது அளித்த புகாரின்பேரில் வீரசோழன் போலீசார் கலிலூர் ரகுமான் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: