×

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணித்த முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் இடதுசாரி கூட்டணியில் ஜனநாயக கேரளா காங்கிரஸ், இந்திய தேசிய லீக், கேரள காங்கிரஸ் (பி), காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகளும் உள்ளன. இந்த கட்சிகளுக்கு தலா ஒரு எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க முடியாது என்பதால் முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு 2 பேருக்கும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு மற்ற 2 பேருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி முதல் இரண்டரை ஆண்டுகள் ஜனநாயக கேரளா காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆண்டனி ராஜுவும், இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்த அகமது தேவர் கோவிலும் அமைச்சர்களாக இருந்தனர்.

இரண்டரை ஆண்டுகள் முடிந்து விட்டதால் சமீபத்தில் 2 பேரும் பதவியை ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து கேரளா காங்கிரஸ் (பி) கட்சியை சேர்ந்த கணேஷ் குமார் மற்றும் காங்கிரஸ் (எஸ்) கட்சியை சேர்ந்த கடன்னப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் நேற்று அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். இதற்கான விழா திருவனந்தபுரத்தில் கவர்னர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்றது. இருவருக்கும் கவர்னர் ஆரிப் முகம்மது கான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்பட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து கவர்னர் ஆரிப் முகம்மது கான் தேநீர் விருந்து அளித்தார். இதில், புதிய அமைச்சர்களான கணேஷ் குமார் கடன்னப்பள்ளி ராமச்சந்திரன் மற்றும் வனத்துறை அமைச்சர் சசீந்திரன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். முதல்வர் பினராயி விஜயனும் மற்ற அமைச்சர்களும் தேநீர் விருந்தை புறக்கணித்து வெளியேறினர்.

The post புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணித்த முதல்வர் பினராயி விஜயன் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Pinarayi Vijayan ,Governor ,party ,Thiruvananthapuram ,Kerala ,Democratic Kerala Congress ,Indian National League ,Kerala Congress ,Congress ,
× RELATED கேரளாவை பிரதமர் மோடி...