×

செப்டிக் டேங்க் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

திருப்பூர்,அக்.20: திருப்பூர், புதிய பஸ் நிலையம் உழவர் சந்தை செல்லும் வழியில் செப்டிக் டேங்க் நிறைந்து கழிவு நீர் வெளியேறுவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. திருப்பூர், புதிய பஸ் நிலையம் பின்புறம் தினசரி உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தைக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தினசரி காய்கறிகள் வாங்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். மேலும் அதனை சுற்றிலும் பல்வேறு வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.  இந்நிலையில் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடத்தின் செப்டிங் டேங்க் நிறைந்து அந்த கழிவு நீர் தொடர்ந்து வெளியேறி கொண்டிருக்கின்றது. இந்த கழிவு நீர் வெளியேற்றத்தால் அப்பகுதிகளில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பல முறை கோரிக்கை வைத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது; இந்த பகுதி தினசரி கழிவு நீர் வெளியேறி வருகிறது. இதனை படம் எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்பினோம். ஆனால் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொரோனா காலங்களில் இது போல சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் கழிவு நீர் வெளியேறினால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை அதிகாரிகள் உடனடியாக சரிசெய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags :
× RELATED குளிர்காலம் தொடங்கியுள்ளதால் நோய் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம்