சாத்தான்குளம் அருகே பெரியதாழையில் மீனவரை தாக்கிய 5 பேருக்கு வலை

சாத்தான்குளம், அக். 20: சாத்தான்குளம் அருகே மீனவரை தாக்கி மிரட்டல் விடுத்த தந்தை, மகன் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 சாத்தான்குளம் அருகேயுள்ள பெரியதாழை புதுவேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் கனிஷ்கர் (62) மீனவரான இவர் கடற்கரை பகுதியில் படகை நிறுத்து வழக்கம். இவ்வாறு அங்கு நிறுத்தியிருந்த படகை நேற்று முன்தினம் எடுக்க முயன்றபோது அதே பகுதியை சேர்ந்த ராஜி (62) என்பவரது படகு மீது எதிர்பாராதவிதமாக இவரது படகு மோதியது.

இதில் ராஜியின் படகு சேதமானதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் ராஜி, அவரது மகன் ஜானி உள்ளிட்ட 5 பேர் அவதூறாகப் பேசியதோடு கனிஷ்கரை சரமாரியாக தாக்கினர். இதில் காயம் அடைந்த கனிஷ்கர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த தட்டார்மடம் எஸ்.ஐ. முத்துசாமி, தாக்குதலில் ஈடுபட்ட தந்தை, மகன் உள்ளிட்ட 5 பேரையும் தேடி வருகிறார்.

Related Stories:

>