×

பழநி கோயில் செயல்அலுவலராக ஐஏஎஸ் அதிகாரி பொறுப்பேற்பு

பழநி, அக். 20: தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு சாதாரண நாட்களிலேயே சராசரியாக 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்வர். தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழா காலங்களில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்வர். இக்கோயிலின் நிர்வாகத்திற்கு ஐஏஎஸ் தரத்திலான அதிகாரிகள் நியமிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனடிப்படையில் பழநி கோயில் செயல் அலுவலராக ஜெயசந்தரபானு ரெட்டி என்ற அதிகாரி ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டார்.

பின், கிருஷ்ணகிரி கலெக்டராக மாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராக இருந்த நடராஜன் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது ஈரோடு வணிக வரிகள் துறை இணை ஆணையராக இருந்த ஐஏஎஸ் அதிகாரியான கிராந்திகுமார் பதி பழநி கோயில் செயல்அலுலவலராக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று தனது பொறுப்புகளை ஏற்று கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம், பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமென தெரிவித்தார்.

Tags : IAS officer ,temple executive officer ,Palani ,
× RELATED விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மக்கள் நீதிமய்யம் கட்சியில் இணைந்தார்