×

மர்ம ஆசாமிகளுக்கு வலை நிலப்பிரச்னை விவகாரம் கலெக்டர் அலுவலகத்தில் 2 பேர் தீக்குளிக்க முயற்சி

பெரம்பலூர், அக்.20: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் வெவ்வேறு நில பிரச்சனைகள் தொடர்பாக 2 பேர் மண்ணெண்ணை ஊற்றித் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் மேற்குத் தெருவை சேர்ந்தவர் அப்துல்சுபஹான் மகன் அப்துல்லாஹ் (49), வெங்காய வியாபாரி. நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த இவர் மறைத்து கொண்டு வந்த மண் ணெண்ணை கேனைத் திறந்து தலையில் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றார். அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்துல்லாஹ் கலெக்டர், எஸ்பி ஆகியோரிடம் கொப்பதற்காக கொண்டு வந்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:

வி.களத்தூர் வண்ணாரம்பூண்டி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி மல்லிகா (65) என்பவரிடம் கடந்த 2016ம் ஆண்டு ஜூன்மாதம் 3.5 சென்ட் நிலத்தை, ரூ.3லட்சத்திற்கு வாங்கியுள்ளார். அதற்கான பத்திரப் பதிவும் செய்துள்ளேன். இந்நிலையில் மகள் திருமண செலவிற்காக நிலத்தை விற்க முயன்றபோது, அது வாரி புறம்போக்கு நிலம் என்பது தெரிந்தது. இதனால் மல்லிகா வாரிப்புறம்போக்கு நிலத்தை எனக்கு எழுதிக் கொடுத்து, என்னை ஏமாற்றியது தெரியவந்தது.
இதனால் மல்லிகாவிடம் கொடுத்தபணத்தை திருப்பி கேட்டதற்கு தனது மகன்களோடு சேர்ந்துகொண்டு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே மல்லிகா மற்றும் அவரது பிள்ளைகள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அப்துல்லா பெரம்பலூர் மாவட்ட நில மோசடி தடுப்புப் பிரிவில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்தபோது, மல்லிகா, தனது தவறை ஒப்புக்கொண்டு 6 மாதத்தில் பணத்தை தருவதாக உறுதி அளித்துவிட்டு, அதன்படி ஆறு மாதங்களாகியும் பணத்தை தராததால் மீண்டும் விசாரணைக்கு அழைத்த போலீஸாரிடம், மேலும் தனக்கு 1 வருடம் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதனால் மகளின் திருமண செலவுக்கு என்ன செய்வது என மனமுடைந்தே அப்துல்லா கலெக் டர் அலுவலகத்திற்குவந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து மனுவைக் கொடுத்து விட்டு அப்துல்லாஹ் வீடு திரும்பினார். மற்றொரு சம்பவம்:  வேப்பந்தட்டை தாலுக்கா பிரம்மதேசம் காட்டுக் கொட்டகையைச் சேர்த்தவர் பூமாலை (67). நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணை கேனுடன் வந்திருந்தார். அதனை ப்பார்த்த போலீசார் விரைந்து சென்று அவர் கையில் இருந்த மண்ணெண்ணை கேனைப் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் பூமாலை தெரிவித்ததாவது : எனது எதிரிகள் சிலரோடு உரிமையியல் நீதிமன்ற வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 25ம்தேதி ஊரில் உள்ள மகளின் வீட்டிற்குச் சென்று ஒருநாள் தங்கியிருந்தபோது, சம்பந்தப்பட்ட எதிரிகள் சிலர் பொக்லைன் இயந்திரம் மூலம் எனது வீட்டை இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். அதில் நான் வைத்திருந்த தங்கச் சங்கிலிகள், ரூ.5 லட்சம் ரொக்கப்பணம் என ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ரூ.5லட் சம் மதிப்பிலான வீடு ஆகி யவற்றை நாசப்படுத்தி விட்டனர்.

இது குறித்து மங்களமேடு போலீசில் புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே போலீசார் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதுவழக்குப்பதி ந்து நடவடிக்கை எடுத்து எனக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். பின்னர் அவரது மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் அவரிடம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : office ,Collector ,assailants ,
× RELATED வாசுதேவநல்லூர், சிவகிரியில் அரசு...