×

குளித்தலை தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தம் மணல் கடத்தல் லாரிகளில் செடிகள் முளைத்த அவலம்

குளித்தலை, அக். 20: கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரிகளை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து குளித்தலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இது போன்ற வாகனங்கள் வட்டாட்சியர் மற்றும் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மேலும் வருவாய் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகள் வெட்ட வெளியிலேயே பல மாதங்களாக நிற்கின்றன. இதனால் லாரியில் உள்ள மணல் ஈரப்பதத்தில் செடி கொடிகள் முளைத்து பயிர் விட்டது போல் காட்சியளிக்கிறது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வாகனங்களை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Kulithalai ,office premises ,
× RELATED குளித்தலை தாலுகா அலுவலக வளாகத்தில்...