×

இருசக்கர வாகனங்களில் வருவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும்.

க.பரமத்தி, அக். 20: இரு சக்கர வாகனத்தில் வருவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வரவேண்டுமென வலியுறுத்தி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழங்கினார்.
கரூர் மாவட்ட எஸ்பி பகலவன் அறிவுறுத்தலின்படி க.பரமத்தி மற்றும் தென்னிலை காவல் நிலையங்கள் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி வைரமடையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் க.பரமத்தி ராஜேந்திரன், தென்னிலை ரெங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

க.பரமத்தி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமாதேவி தலைமை வகித்து துண்டு பிரசுரத்தை வழங்கி பேசியதாவது: இரு சக்கர வாகனம் ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வரவேண்டும், இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். வாகன ஓட்டிகள் ஓட்டுனர் உரிமம் கண்டிப்பாக வைத்திருந்தல் வேண்டும். சாலை சந்திப்புகளில் மிகுந்த கவனத்துடன் வாகனத்தை ஓட்டி செல்ல வேண்டும். காரில் வருபவர்கள் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும். அத்தோடு மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக் கூடாது, செல்போன் பயன்படுத்த கூடாது, அதி வேகமாக வாகனத்தை ஓட்டக்கூடாது. என்று கூறி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் க.பரமத்தி மற்றும் தென்னிலை காவல் நிலைய போலீசார் கலந்து கொண்டனர்.

Tags : motorcyclists ,
× RELATED ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும்...