×

49வது ஆண்டு துவக்க விழா அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பரமக்குடி, அக். 18:  அதிமுகவின் 49வது ஆண்டு துவக்க விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் பரமக்குடி பஸ்நிலையம் அருகில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மாவட்ட கழக செயலாளர் முனியசாமி தலைமை வகிக்க, மாநில மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் முன்னிலை வகித்தனர். பின்னர் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் குப்புசாமி, முத்தையா, நாகநாதன், அசோக்குமார், நகர் செயலாளர் அங்குசாமி, பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் சரவணகுமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக், பரமக்குடி ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் வடமலையான், நகர இளைஞர் பாசறை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இளை
ஞர் பாசறை துணை செயலாளர் தினேஷ், மாவட்ட மாணவர் அணி பொருளாளர் யோக மணிகண்டன், நயினார்கோவில் ஒன்றிய மாணவரணி செயலாளர் சத்தியேந்திரன், அரியாங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பிரபு, கூட்டுறவு சங்க தலைவர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் அருகில் ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், பார்த்திபனூரில் நகர் செயலாளர் வினோத், நயினார் கோவிலில் ஒன்றிய செயலாளர் குப்புசாமி, போகலூரில் ஒன்றிய செயலாளர் நாகநாதன் ஆகியோரது ஏற்பாட்டில் கட்சி கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். *கமுதி பஸ்நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் காளிமுத்து, மாவட்ட செயலாளர் முனியசாமி கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினார். இதில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தர்மர், மின்சார பிரிபு அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய அவைத்தலைவர் சேகரன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கருமலைராஜன், தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்மல் குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் கணேசன், மூர்த்தி, அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் முதல்நாடு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் காசிராஜன் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

Tags : Anniversary Opening Ceremony ,
× RELATED 49 சிறப்பு முகாம்களில் தங்கியிருந்த 1,831 பேருக்கு நிவாரண பொருட்கள்